Thursday, 27 October 2011

    போதகர் ஒருவர் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். அந்த வீட்டின் சொந்தகாரர் ஒரு விவசாயி ஆவார். ஒரு நாள் தன்னுடைய வீட்டுக் கோழிகூட்டுக்கு போதகரை அழைத்தார் விவசாயி.

      அந்த கோழிகூட்டில் ஒரு கோழி அமர்ந்த நிலையில் காணப்பட்டது. கோழியின் செட்டைக்குள்ளிருந்து கோழிக்குஞ்சுகள் மெல்ல எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. அமர்ந்த நிலையில் இருந்த அந்த கோழியை தொட்டுப்பார்த்த போதகர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கோழி செத்து விறைத்துப் போயிருந்தது.
   விவசாயி போதகரிடம் மெல்ல சொன்னார், "கோழியின் தலையில் உள்ள காயத்தை பாருங்கள், மரநாய் ஒன்று அதை கடித்து இரத்தம் குடித்திருக்கிறது. குஞ்சுகளுக்கு தீங்கு ஒன்றும் ஏற்படாதபடி கோழி செட்டைக்குள்மறைத்து வைத்துக் கொண்டு அசையாமல் அப்படியே  இருந்திருக்கிறது. தன்னைக் காத்துக் கொள்ளாமல் குஞ்சுகளைக் காப்பாற்றியிருக்கிறது."
   போதகர் சொன்னார், " இது கிருஃஸ்துவை போலிருக்கிறது. கிருஃஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி  நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்கள்படி மூன்றாம் நாளில் உயிர்த்த்ழுந்தார்(1கொரிந்தியர் 15:3,4). அவர் சிலுவையில் வேதனைகள் முழுவதையும் சகித்துக் கொண்டார். அவர் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ளாமல் நம் எல்லாருடைய பாவங்களுக்காகவும் சிலுவையில் மரித்து, சாபங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் மீட்டு, நரகதின் வல்லமைகளினின்று நம்மை பாதுகாத்திருக்கிறார்."
    -போதகரின் வார்த்தைகள் விவசாயின் மனதை தொட்டது. விவசாயி கிருஃஸ்துவின் அன்புக்கு தன்னை அர்ப்பணித்தார்.
    ஆம், பிரியமானவர்களே! இயேசுகிருஃஸ்து நம்மை காப்பாற்றும்படியாக கல்வாரிசிலுவையில்  எல்லா வேதனைகளையும்  சகித்துக் கொண்டு, நமக்காக ஜீவனைக் கொடுத்தார். நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய சித்தயிமாருக்கிறது.
     இயேசுகிறிஃஸ்துவின் செட்டைகளின் நிழலில் உங்களுக்கு ஆறுதல் இருக்கிறது. அவருடைய செட்டைகளின் மறைவில் உங்களுக்கு  ஆரோக்கியம் இருக்கிறது. எனவே, உலகத்தின் பாடுகளையெல்லாம் மறந்து இன்றே இயேசுவின் செட்டைகளுக்குள்  வந்தடையுங்கள்.

     தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.                       (யோவன்3:16).

No comments:

Post a Comment